x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

விலகாதே

25 Sep 2010

அவதாரம் தயாரிப்பில், சதாபிரணவன் வரிகளுக்கு ஜனாவின் இசையமைத்து சுனித்தா சாரதி பாடி சாருகாவின் நடிப்பில் டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு செய்து வெளிவந்துள்ள பாடலே விலகாதே.





இந்த பாடலில் வரும் இடத்தேர்வு மனதில் முதல் இடம்பிடிக்கிறது. ஒரு பெண்ணின் தனிமையை களவாடிச் சென்றவனைப் பற்றிய பாடலாக இருக்கிறது. பாடலை பாடியபடி நடித்திருக்கும் சருகா சிறந்த தேர்வு. பாடல் பாடியிருக்கும் சுனிதா பாரதியின் குரலில் ஒரு சோக இழையோடுவது பாடலுக்கு ஜனாவின் இசை இன்னும் அழுத்தம் கொடுத்துள்ளது. பாடலின் வரிகள் பெண்ணின் இரவுகளையும் கனவுகளையும் அசைத்துப் பார்க்கிற ஏக்கத்தைச் சொல்வதாக சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட ஒருவருக்கான பெருமை என்பதைவிட இந்த பாடலுக்கு உழைத்திருக்கும் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்ட வேண்டும். நல்ல பாடலை வழங்கியிருக்கிறது அவதாரம் நிறுவனம்.