x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள் "பாவம்"

03 Oct 2010

சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் சுஜீத்ஜீ முதல் முறையாக அதே கருத்தை குறும்படமாக திரைக்கதை அமைத்து, படத்தொகுப்பு செய்து, இயக்கி முடித்துள்ளார்.



ஈழவர் திரைக்கலை மன்றம் தயாரிக்கும் இப் படத்திற்கு பாவம் என்று பெயர் வைத்திருப்பதாகவும், "எதையும் ஏன் எதற்கு எப்படி என்று கேள்" என துணைத்தலைப்பு இட்டிருப்பதாகவும்.


Paavam Short Film
Paavam Short Film
இந்த குறும்படம் எந்த சமூகத்திலும் இல்லாதோரின் பெயரைப் பயன்படுத்தி இருக்கிறவர்களிடம் கொள்ளையடிக்கின்ற சிலரின் கதையாக எடுக்கப்பட்டுள்ளதாகவும். கொள்ளையடிக்கின்றவர்களால் உண்மையுள்ளவர்களும் பாதிப்படைகிறார்கள் அது பற்றியதே என சுஜீத்ஜீ ஈழத்திரைக்கு தெரிவித்தார்.

ரஞ்சனின் ஒளிப்பதிவில் இப் படம் செப்டெம்பர் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் லண்டனில் படம் பிடிக்கப் பட்டது எனவும். இதில் சஞ்சய், வேந்தன், யோகேஸ், சுஜீத்ஜீ ஆகிய நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்குறும்படம் ஒக்ரோபர் 9 அன்று ஈழத்திரை இணையத்தில் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது