x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

என் சுவாசம்

04 Oct 2010

விடியல், இலட்சிய வேட்கை, தீராத தாகம், போன்ற குறும் படங்களை தொடர்ந்து இளம் தமிழ் படைப்பகம் மற்றுமொரு படமான என் சுவாசம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
நோர்வேயில் வசிக்கும் பிரசன்னா மற்றும் சில இளைஞர்களால் சில ஆண்டுகளுக்கு முன் சில குறும்படங்கள் இளம் தமிழ் படைப்பகம் பெயரில் தயாரிக்கபட்டன. அதனைத் தொடர்ந்து என் சுவசம் என்ற முழுநீளத் திரைப்படம் பிரசன்னாவின் இயக்கத்தில் ராஜ் பவன், அர்ச்சனா மற்றும் பல கலைஞர்கள் நடிபில் உருவாக்கபட்டுள்ளது.

இந்த திரைப்படத்துக்கு திலக் படப்பிடிப்பாளார் ஆகவும் வர்ணன் 'ஜி ' சேகரம் இசை அமைப்பாளராகவும் கடமையாற்றி உள்ளனர். பாடல் வாரிகளை கவியாழன் எழுதி உள்ளார். இத் திரைப்படத்தின் பாடல்களை ராஜ் பவன் மற்றும் பிரதீசன் பாடியுள்ளனார்.

படபிடிப்புகள் யாவும் சுவிடன் நாட்டில் நடைபெற்று, தற்போது படபிடிப்புகள் யாவும் முடிவடைந்து படத்தொகுப்பு மற்றும் பின்னனி இசை வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும். என் சுவாசம் திரைப்படம் விரைவில் திரை அரங்குக்கு வர இருப்பதாகவும் இயக்குனர் பிரசன்னா ஈழதிரைக்கு தெரிவித்துள்ளார்.