x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

இனி எனினும்

06 Oct 2010

ஈழத்து நவீன நாடக முன்னோடிகளில் ஒருவரும் பிரபல சட்டவாளருமாகிய காசிநாதர் சிவபாலன் அவர்களின் திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த "இனி எனினும்" குறும் படம்.




இனி எனினும்1995ல் வெளியான இப்படம் அவருடைய முதல் முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சிவபாலன் அவர்கள் 1966/67 இல் இலங்கையில் நாடகக் கலையைப் பயின்றார்.

அவருடைய முதல் படமான இனி எனினும் குறும்படத்தில் சாதாரண படங்கள் போல் இல்லாமல் உரையாடல் எதுவும் இன்றி காட்சிகள் மூலம் கதையை உணரவைத்திருப்பது அவருடைய திரைக்கலையின் புரிதலுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இக் குறும்படத்தில் ஒளிப்பதிவுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இப் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனராக புனே திரைப்பட பள்ளியின் பழைய மாணவரான திரு மது அம்பத் அவர்கள் பணியாற்றியுள்ளார். இலங்கையின் பிரபல இசை அமைப்பாளரான H. பிரசாந் அவர்களின் இசையில், குமரி மற்றும் ராஜேந்திரகுமார் ஆகியோரின் நடிப்பில் மிக சிறப்பாக எடுக்கப் பட்டுள்ளது இக் குறும்படம்.

இக் குறும்படம் கொழும்பையும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் படமாக்க பட்டுள்ளது.