ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ஈழத்திரை இணையம் ஒரு இலாப நோக்கமற்ற, ஈழத்து திரைத்துறையை வளர்க்கும் நோக்குடன் செயற்படும் ஒரு சுதாசீன கட்டமைப்பு.
பிரதானசேவைகள்:
நோக்கம்:
கலைஞர்கள்:
அனைத்து ஈழத்தமிழ் கலைஞர்களும் ஈழத்திரை இணையத்தளத்தில் (eelamcinema.com) தமக்கான தனிக் கணக்கினை உருவாக்கிக்கொள்ள முடியும். அவர்களின் தரவுகள் 24 மணி நேரத்துக்குள் சரிபார்க்கப்பட்டு, கடவுச்சொல் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் (கடவுச்சொல்லை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கிறோம்). அதன் பின் உள்நுழைந்து விபரங்களை இணைத்துக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் முடியும்.
விளம்பரங்கள்:
அனைத்து ஈழத்தமிழ் திரைப்படங்கள், நிகழ்வுகள் மற்றும் கலைஞர்கள் பற்றிய விளம்பரங்கள் எப்போதும் இலவசமாகவே இணைக்கப்படும்.
காப்புரிமை:
ஈழத்திரை இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் பாடல் காணொளிகள் போன்ற ஈழத்திரை இணையத்தால் தயாரிக்கப்படாதவை, அனைத்தினதும் காப்புரிமை ஈழத்திரை இணையத்தினுடையதல்ல. ஈழத்திரை இணையத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும், ஈழத்திரை இணையம் காப்புரிமை கோராத அனைத்து படைப்புகளும் சமூக ஆர்வலர்களால் மற்றும் கலைஞர்களால் எமக்கு அனுப்பப்பட்டவை. உங்கள் படைப்பு ஈழத்திரை இணையத்தளத்தில் ஆவணப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்பாவிடின், அதனை எழுத்து மூலம் எமக்கு அறியத்தந்தால், குறித்த படைப்பு இணையம் மற்றும் ஆவணக்காப்பகத்திலிருந்து 48 மணித்தியாலத்திற்குள் அகற்றப்படும்.
தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் திரைக்கலை ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இம் முயற்சி வெற்றி பெற யாவரதும் ஆதரவையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்கிறோம். கலைஞர்களே! ஆர்வலர்களே! உங்களிடம் ஒரு வேண்டுகோள்: உங்கள் ஆக்கங்களையும், நமது கலை மற்றும் பண்பாடு பற்றிய உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு (eelamcinema(அ)gmail.com) அனுப்பி, ஈழத்து திரைப்படத்துறையை வளர்க்க உதவுங்கள்.
நமக்கான தனித்துவமான திரைப்படத்துறையை வளர்த்தெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போமாக.
அன்புடன் ஈழத்திரை இணையம்