x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

சங்கிலியன் விருது - 05

19 Dec 2010

நல்லூர்ஸ்தான் நடாத்திய 'சங்கிலியன் விருது 05' குறும்படப்போட்டி சிறந்த குறும்படங்களிற்கான விருது வழங்கல், 19.12.2010 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிறப்பாக நடை பெற்றது.

சங்கிலியன் விருது 05 இல் சிறந்த படமாக சதாபிரணவன் இயக்கிய 'தினப்பயணம்' குறும்படம் தெரிவுசெய்யப்பட்டது. இரண்டாவது படமாக பாஸ்கரன் இயக்கிய 'செல்வன்' குறும்படம் தெரிவுசெய்யப்பட்டது. சிறந்த மூன்றாவது குறும்படமாக சுதன் மகாலிங்கம் இயக்கிய 'The Opposite' தெரிவுசெய்யப்பட்டது. நடுவர் சிறப்பு விருது ரமணன் இயக்கிய 'செம்மலையான்' குறும்படம் பெற்றுக்கொண்டது.

சங்கிலியன் விருது 05 குறும்படப்போட்டிக்குத் தெரிவாகிய அனைத்துக் குறும்படங்களிற்கும் போட்டியில் பங்குபற்றலுக்கான நினைவுப் பரிசுகள் வழங்கி குறும்பட இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்ற கலைஞர்கள் விபரம்:
சிறந்த நடிகர் - கணேஷ் தம்பையா (ஐயோ)
சிறந்த நடிகை - ஜமுனா (ஆசுவாசம்)
சிறந்த ஒளிப்பதிவு - டெசுபன் (The Opposite)
சிறந்த படத்தொகுப்பு - டெசுபன் (The Opposite) மற்றும் ஆரு(ஐயோ)
சிறந்த இயக்குநர் - சுதன் மகாலிங்கம் (The Opposite)
சிறந்த இசை - சாரு (ஐயோ)
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்- சூர்யா மற்றும் அபிஷனா (petit coeur)
சிறந்த திரைக்கதை - கோகுலன் (குருவிச்சை)
சிறந்த கதை - சுதன் மகாலிங்கம் (The Opposite)