x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

கனடாவிலிருந்து வெளியாகும் 'Star 67' திரைப்படம்

19 May 2011

பரபரப்பு, அதிரடி நிறைந்த விறுவிறுப்பான புதிய திரைபடம் star 67 எனும் பெயரில் கனடாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.செல்வகுமார் மற்றும் பாலசிங்கம் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை கனேடிய தயாரிப்பு நிறுவனமான Wotar Sound Pictures தயாரித்துவருகிறது.

கண்ணன் இமான், ஜெனீஷா, யசோதா மற்றும் பலர் நடிக்கும் இத் திரைப்படம் நகைச்சுவை விறுவிறுப்பு என பார்வையாளர்களைக் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இத்திரைப்படம் கனடாவில் கோடைகாலத்தில் திரைக்கு வரும் என தெரிவிக்கிறார்கள் திரைப்படக்குழு.
இவர்கள் இதற்குமுன் பல குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.