ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அவர்களின் இயக்கத்தில் உருவாகி உள்ளது 'ஒன்பது டாலர் 50 சென்ட்' என்ற குறும்படம்.
இந்தக் குறும்படம் கனடா வாழ் தமிழ் இளைஞர்களின் நிழலுலக வாழ்க்கையை மையமாகக் கொண்டது. 1990களில் நிகழ்ந்த ஒரு சில விரும்பத்தகாத மாறுதல்களின் சாட்சியாக இன்று வரை இளைஞர்களிடம் எதிர்மறைத் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் மற்றும் புதியவர்களால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் பார்வையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளமை மேலும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. திறமை மிகுந்த இசை அமைப்பாளர் பிரின்ஸ்டன் கணேஷரத்னம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மார்ச் 27 அன்று காண்பிக்கப்பட்ட சிறப்புக்காட்சி அரங்கம் நிறைந்து காணப்பட்டது என்பது இந்த படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இளைஞர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கும் '9 டாலர்ஸ் 50 சென்ட்' இளைஞர்களிடம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Director : Ranjith Joseph
Producer : G3 Abstract
Editor : Pras Lingam
Director of photography : Yaron Betans
Composer : Princeten Ganesharatnam