ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
வன்னியின் பளைப்பகுதியில் "எல்லாளன்" திரைப்படத் தயாரிப்புப் பணிகளின் போது சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் லெப்.கேணல்.தவம் அவர்கள் வீரச்சாவடைந்திருந்தார். லெப்.கேணல்.தவம் நினைவாக ஆண்டு தோறும் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் நடத்தும் குறும்படப் போட்டி இதுவாகும்.
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு: 2008
போட்டிக்கான இறுதித்திகதி: ஆகஸ்ட்
பிரிவு: குறும்படம்
Requirements: DV Cam மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழர் படைப்புகள் மட்டும். குறும்பட நேர எல்லை 23 நிமிடங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும், போட்டியில் பங்குபற்றும் படமானது முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இணையத்தளங்கள் உட்பட வேறு எங்கும் திரையிடப்பட மாட்டா தென்பதை உறுதிப்படுத்தி இயக்குநரும், தயாரிப்பாளரும் கையொப்பமிட்டு அனுப்பி வைத்தல் வேண்டும்.
விருது: சிறந்த படம் (2000 €), இரண்டாம் பரிசு (1000 €), மூன்றாம் பரிசு (500 €), சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர்/நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த திரைக்கதை.
கட்டணம்: 100 €
அலுவலக முகவரி: CCTF, 341 Rue des Pyrénées, 75020 Paris, FRANCE,
தொலை பேசி: +33 1 43 58 11 42
தொலை நகல்: +33 1 43 58 11 42
மின்னஞ்சல்: [email protected]