ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
இலங்கைத் தீவில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்படுவதை சுட்டிக் காட்டுகிற ஒரு ஆவணப்படம் 'முல்லைத்தீவு சகா'. இறுதிப் போர் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் மக்களைக் கொன்று குவித்த கொடுமையை உலகளாவிய அமைப்புகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்தது. அதைச் செய்த இலங்கை அரசு உலகிலேயே மனித இனத்தைக் காப்பதற்கான மிகப் பெரிய அமைப்பு தான்தான் என சொல்லிக் கொள்கிறது. உலக அமைப்புகள் இந்த உண்மையை ஏற்கிறதா? அல்லது உண்மையை யூகித்திருக்கிறதா? என சொல்கிறது முல்லைத்தீவு சகா.
ஒளிப்பதிவு, தேடல் மற்றும் இயக்கம்: S.சோமிதரன்
படத்தொகுப்பு: B.பிரவின்குமார்
இசை: G. சஜேஷ்
தயாரிப்பு: லெமூரியா பிக்சர்