ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் நடத்தும் லெப்.கேணல்.தவம் குறும்படப் போட்டி- 02 இற்கான குறும்படங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதித் திகதி 10.08.2010 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வன்னியின் பளைப்பகுதியில் ‘எல்லாளன்’ ஆவணப்படத் தயாரிப்புப் பணிகளின் போது சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் போது லெப.கேணல்.தவம் அவர்கள் வீரச்சாவடைந்திருந்தார்.
இவர் ஈழத்தின் திரைப்படத்துறையின் முக்கியபங்காற்றியிருந்தார். ‘எங்கள் வாழ்வை…. எங்கள் வலிகளை… எங்கள் திரைமொழியில், நாமே எழுதுவோம்’ என்ற தலைப்பில் ஐரோப்பா, கனடா, ஸ்கன்டினேவியா, அவுஸ்திரேலியா தழுவிய புலம்பெயர் தமிழ் படைப்பாளிகளிடம் தவம் நினைவு விருதுக்கான இந்தப்போட்டி நடத்தப்படுகிறது.
போட்டியாளர்களின் நலனை அடிப்படையாகக்கொண்டு முன்னர் குறிப்பிடப்பட்ட முடிவு திகதியான 31.07.2010 இல் இருந்து மேலும் பத்து நாட்களிற்கு 10.08.2010 வரை கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 28.08.2010 மாலை 15:00 மணிக்கு Salle Jeanne Dàrc, 50, rue de Torcy. 75018 Paris எனும் முகவரியில் விழா நடைபெற உள்ளதாகவும்
வெற்றி பெறும் குறும்படங்களுக்கு 1வது பரிசு 2000€, 2வது பரிசு 1000€, 3வது பரிசு 500€ வழங்கி கலைஞர்களை ஊக்குவிக்க உள்ளனதாகவும் தவம் குறும்படவிழா இயக்குநர் அன்றூ அவர்கள் ஈழத்திரைக்கு அறிவித்துள்ளார்.