ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட கொடுமைகளையும் வேதனைகளையும் வெளிக்கொண்டுவரும் நோக்கில் சு.பரமேஸ்வரன் இயக்கத்தில் 'பூவுக்குள்' என்னும் குறும்படம் தயாரிக்கப்பட்டுவருகிறது. இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தயாரிக்கப்படும் இக் குறும்படத்தை தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 10.07.2010 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள தயாரிப்புப் பணிகள் 25.07.2010 ஆம் திகதி முடிவுக்கு வருகிறது. இதற்கான செலவாக 350 பவுண்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப்பதிவான இந்தக் குறும்படம் சுமார் ஒரு நிமிடம் மாத்திரம் ஓடக்கூடியதாகும்.
குறித்த ஒரு நிமிடநேரத்தில் கதையை மிகவும் தந்துருவமாக தாம் கூறியிருப்பதாக இயக்குநர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
‘பூவுக்குள்’ என்னும் இந்தக் குறும்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை சசி ஏற்று நடிக்கும் இதேவேளை ஆதி, சாந்தி, குமரன் ஆகியவர்களும் நடிக்கிறார்கள். தொழில் நுட்பப்பணிகளை சுதர் மற்றும் கொற்றவைக்குமரன் ஆகியோர் ஏற்றுள்ளனர்.
ஜூட் ஜெயராஜ்ஜின் இசையில் உருவாகும் இப்படத்திற்கு மகேஷ், அபி ஆகியோர் பின்னணிக்குரல் வழங்குகிறார்கள்.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றையும் இயக்குநர் சு.பரமேஸ்வரன் தானே கவனித்துக்கொள்கிறார்.
தயாரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் ‘பூவுக்குள்’ குறுந்திரைப்படம் பிரான்ஸ் கலை பண்பாட்டுக்கழகத்தால் நடத்தப்படும் லெப்.கேணல்.தவம் குறும்படப்போட்டிக்கு அனுப்பட உள்ளதாகவும் இயக்குநர் ஈழத்திரைக்கு மேலும் தெரிவித்தார்.