x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

லெப்.கேணல்.தவம் நினைவு குறும்படவிழா-02

28 Aug 2010

பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடத்திய லெப்.கேணல்.தவம் நினைவு குறும்படவிழா-02 சிறந்த குறும்படங்களிற்கான விருது வழங்கல், வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கலைஞர் கெளரவிப்பு என்பனவற்றுடன் 28.08.2010 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சிறப்பாக நடை பெற்றது.

தவம் குறும்பட விழாவின் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக ம.பாஸ்கர் இயக்கிய ‘எனக்கும் உனக்கும்’ என்ற குறும்படம் தெரிவு செய்யப்பட்டது. இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த படம், சர்வதேச திரைப்படவிழாக்களில் பின்பற்றப்படும் அடிப்படை விதிகளை மீறியுள்ளமையால் அப்படத்திற்கு வழங்கப்பட்ட பரிசுகள் செல்லுபடி அற்றதாக விழா நடுவர்கள் அறிவித்துள்ளனர். சிறந்த மூன்றாவது குறும்படமாக 'கலாச்சாரம்' தெரிவுசெய்யப்பட்டது. இதற்கான விருதினை இயக்குனர் இ.ரமணன் பெற்றுக்கொண்டார்.

லெப்.கேணல்.தவம் நினைவுக் குறும்படப்போட்டிக்குத் தெரிவாகிய அனைத்துக் குறும்படங்களிற்கும் போட்டியில் பங்குபற்றலுக்கான தவம் நினைவுப் பரிசுகள் வழங்கி குறும்பட இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர்.

மதிப்பளிப்புச் செய்யப்பட்ட கலைஞர்கள் விபரம்:
சிறந்த நடிகர் - இ.ரமணன் (கலாச்சாரம்)
சிறந்த நடிகை - யு.சு.பொபிதா (எனக்கும் உனக்கும்)
சிறந்த ஒளிப்பதிவு - க.கவிநாத் (எனக்கும் உனக்கும்)
சிறந்த படத்தொகுப்பு - ஆ.குணா (அம்மணம்)
சிறந்த இயக்குநர்- ம.பாஸ்கர் (எனக்கும் உனக்கும்)
சிறந்த இசை - சாரு (அம்மணம்)
சிறந்த குழந்தை நடிகை - (பூவுக்குள்)
சிறப்பு நடுவர் விருதுகள் - தசாவதாரம் அனிமேசன் படத்திற்காக (திருமதி. ஸ்ரெலின்குமார் பகீரதி)
சிறந்த ஆவணப் படத்திற்கான விருது - து.சதீஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

லெப்.கேணல்.தவம் குறும்பட விழாவில் ஈழத்துத் திரைப்படத்துறையில் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை பணியாற்றிவரும் மூத்த கலைஞர் திரு.ஏ.ரகுநாதன் அவர்களிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வழங்கி மதிப்பளித்தது.

வெற்றி பெற்ற கலஞர்கள் மற்றும் பொன்விழா காணும் மூத்த கலைஞர் திரு.ஏ.ரகுநாதன் அவர்களையும் ஈழத்திரை பாராட்டுகிறது.