x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனின் பவளவிழா மற்றும் ஈழத்து கலைஞர் தினம்

30 Sep 2010

ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாவும், திரு ரகுநாதன் அவர்களின் பல வருடக்கனவான ஈழத்துக் கலைஞர் தினமும் 25ம் திகதி பாரிசில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் ஏற்பட்டளர்களில் ஒருவரும் உலகத் தமிழ்க்கலைஞர்களை ஒன்று திரட்டும் ஊடகவியாளருமாகிய, எஸ் கே ராஜென் தொகுத்து வழங்க, மங்களவிளக்கை எஸ்.கே.காசிலிங்கம் தம்பதியினர் மற்றும் சுரேஸ் கிருஷ்ணா தம்பதியினர் ஏற்ற, அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. நாட்டுக்கூத்துக் கலைஞர்களின் வாழ்த்துப்பாடல்களுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகள், நாச்சிமார் கேவிலடி ராஜனின் வில்லுப்பாட்டுடன் சூடுபிடிக்கத் தொடங்கின.

விழா நாயகனை துணைவி சகிதம் கலைஞர்கள் மேடைக்கு அழைத்துவர அனைவரும் எழுந்துநின்று அவ் வாழ்நாள் சாதனையாளனுக்கு மதிப்பளித்தது மட்டுமன்றி இயக்குநர் பரா மற்றும் பாரீஸ்ரர் ஜோசப் விழா நாயகனுக்கு பொன்னாடை போர்த்த, திருமதி லீனா ஜெயக்குமார், நாயகி திருமதி சந்திராதேவி ரகுநாதனுக்கு பொன்னாடை போர்த்தி அரங்கிற்கு வரவேற்றனர்.

தொடர்ந்து நிகழ்வை ஈழத்து நவீன நாடகத்தந்தை ஏ.சி.தாஸீசியஸ் வழிநடத்திச்செல்ல நடிகை பொபிதா, சந்திரநாதன், நடிகை சிவோஜிவா, இயக்குனர் வதனன், இயக்குனர் மற்றும் கலைஞர் நாடக ரமனண், தமிழியம் சுபாஸ், எழுத்தாளர் துரை, சாம்சன் மற்றும் பல கலைஞர்களின் பாராட்டு மழையுடன் அரங்கம் நிறைந்தது.

'சுட்ட பழமும் சுடாத மண்ணும்' சிறப்பு மலரை தலைவர் தாசீசியஸ் வெளியிட திருமதி சந்திராதேவி ரகுநாதன் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பாரிஸ்ரர் ஜோசெப், சுரேஸ் கிருஷ்ணா, அருணகிரி, யோகராஜா, கலைக்கண் பாலா, அரியநாயகம், தயாநிதி மற்றும் முகுந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மலரை அறிமுகபடுத்தி அ.குமரன் உரையாற்றியதை தொடர்ந்து திரு ரகுநாதன் அவர்களின் வாழ்க்கையை குறிக்கும் விபரணச்சித்திரம் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திரு ரகுநாதன் அவர்களின் விருப்பத்தில், வளர்ந்து வரும் இயக்குநர்கள் சதா பிரணவன், பாஸ்கர், றோபேட், தமிழியம் சுபாஸ், வதனன், பிரதீபன், ஊக்குவிப்பாளர் குணா, நடனக்கலைஞர்கள் பிறேம் கோபால், பிரேமினி மற்றும் நாடகக் கலைஞர் மனோ ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

விழா நாயகன் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களின் ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.