x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ரூபா (Roobha) திரைப்பட வெளியீடு

10 Nov 2020

திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டங்கள் பற்றிப் பேசும், ஈழத்தமிழ் திரைப்பட இயக்குனரான லெனின் எம் சிவம் அவர்களின் இயக்கத்தில் உருவான ரூபா (Roobha) திரைப்படம் 17.11.2020 அன்று வடஅமெரிக்காவில் திரையிடப்படவுள்ளது. இணைய வாயிலாக (OTT Platform) திரையிடப்படும் குறித்த திரைப்படத்தை Amazon Video, iTunes, InDemand, Vudu, Google Play, மற்றும் Bell VOD ஆகிய இணையத்தளங்களில் (OTT Platform) பார்வையிட முடியும்.

இருபது வயது நிரம்பிய அழகான நடனக் கலைஞரான ரூபாவிற்கும், மிகவும் வயதான குடும்பஸ்தரான அந்தோனிக்கும் இடையிலான காதல் ஊடாக, திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டங்களை எடுத்தியம்பியுள்ள்து ரூபா. குறித்த திரைப்படம், 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற reelworld 18 திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், Bagri Foundation London Indian Film Festival இலும் திரையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.