ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ஹொலிவூட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட கனடாவில் பிறந்த மைத்ரேயி இராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan) என்ற 18 வயது நடிகை கடந்த 15.11.2020 அன்று நடைபெற்ற 2020 E! People’s Choice Awards என்ற விருது வழங்கும் நிகழ்வில் Best TV Show of the Year என்ற விருதை பெற்றுள்ளார்.
'Never Have I Ever' என்ற அமெரிக்க விடலைப் பருவ நகைச்சுவை நாடகத் தொடரில் நடித்ததற்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சியானது, உலகெங்கிலும் உள்ள இளவயதினர், LGBTQIA+ சமூகத்தினர், புலம்பெயர்ந்த சமூகங்கள் மற்றும் பலரதும் வாரவேற்பைப் பெற்றுள்ளமையானது ஆச்சரியமான விடயமாகும்.
இந்நிலையில், குறித்த விருதை பெற்றுக்கொண்ட மைத்ரேயி இராமகிருஷ்ணன், தன் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்ததோடு, Never Have I Ever இன் இரண்டாவது பகுதி விரைவில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.