ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ஈழத்தவர்களின் படைப்புக்களை மட்டுமே தாங்கிய பண்டாரவன்னியன் புத்தகசாலை 2020.11.19 (வியாழக்கிழமை) அன்று காலை 09.43 மணிக்கு திறக்கப்படவுள்ளது.
குறித்த பண்டாரவன்னியன் புத்தகசாலையானது, இல - 113 பாடசாலைவீதி, பண்டாரிகுளம், வவுனியா என்ற முகவரியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புத்தக்கக் கடையின் நிறுவுனரான பரிதி ராஜ் (Parithi Rajh) என்பவர், தான் இந்தப்புத்தகசாலையை நிறுவதற்கான காரணம் குறித்து தனது சமூகவலைத்தளப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளதாவது "நான் ஒரு புத்தகக்கடை திறக்கின்றேன் எனச் சாதாரணமாக சொல்லிவிட்டுக் கடந்துவிட முடியாத பெருங்கனவொன்றைச் சாத்தியமாக்கியிருக்கிறேன். பல வருட காலமாக இவ்வாறானதொரு புத்தகசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எனது பெருங்கனவை நிஜமாகுவதற்காக கைகொடுத்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஈழ தேசத்தின் படைப்பாளிகள், புலம் பெயர் தேசத்துப் படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எத்தனையோ ஏமாற்றங்கள், காத்திருப்புகள், அவமானங்கள், முகஞ்சுழிப்புகளைக் கடந்தும் ஈழத்துப் படைப்பாளர்களின் படைப்புகளை மாத்திரமே எனது புத்தகக் கடையில் விற்பேன் என்ற கொள்கையோடு நான் இந்தப்பணியில் காலடி எடுத்துவைப்பதோடு, என் தேசம் ஆண்ட பண்டாரவன்னியன் பெயர் தாங்கி நம்பிக்கையோடு இந்தப்பணியில் காலடி எடுத்து வைக்கின்றேன்"
இவ்வாறான எம்மவர்களின் முயற்சிகள் ஈழத்துப்படைப்பாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும்.