x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

பெர்லின் திரைப்பட விழாவைப் பெப்ரவரி மாதத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

21 Jan 2021

பெர்லின் திரைப்பட விழாவை 2021 பெப்ரவரியில் ஒரு நேரடியான நிகழ்வாக நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 11 - 21 வரை நடக்கவிருக்கும் திரைப்படவிழாவிற்கு COVID-19 நிலமை காரணமாக பார்வையாளர்களை உள்வாங்குவதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட விழா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், வழமையான திரையிடல்கள் போலவே திரைப்படங்கள் திரையிடல் இடம்பெறும். ஆனால்,கொவிட்-19 விதிமுறைகளின் காரணமாக, திரையரங்குகளில் இருக்கைகளை 45 - 50 வீதமாகக் குறைக்கப்படவுள்ளது. இதனால், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையுமே தவிர போட்டியில் உள்வாங்கப்படும் திரைப்படங்கள் மற்றும் அவற்றைத் தெரிவுசெய்யும் முறைகளில் மாற்றம் ஏற்படாது. அத்துடன், பிற பெரிய பிரிவுகளான ஜெனரேஷன் மற்றும் பனோரமா ஆகியவையும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் திரையிடலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள டிக்கட்டுக்களை முற்பதிவு செய்வதன் ஊடாக மாத்திரமே பெற்றுக்கொள்ளமுடியும். அத்துடன், விழாவில் பங்குபற்றுபவர்களது ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு COVID-19 விதிமுறைகளுடன், சமூக இடைவெளிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக திருவிழா செய்தித் தொடர்பாளர் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திரைப்பட விழாவானது, தொடங்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருவதுடன், அனைத்துத் திரைப்பட விழாக்களையும் விட அதிகளவானோர் வருகைதரும் திரைப்பட விழாவாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.