x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள 71 ஆவது பெர்லினால் சர்வதேச திரைப்பட விழா

20 Dec 2020

2021 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 71 ஆவது பெர்லினால் சர்வதேச திரைப்பட விழாவானது மார்ச் மாதத்தில் தொழில்முறை சார்ந்த ஒன்லைன் விழாவாகவும், ஜூன் மாதத்தில் பொது மக்களுக்கான நேரடி நிகழ்வாகவும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாக பெர்லினால் பத்திரிகை அலுவலகம் 18 டிசம்பர் 2020 அன்று தெரிவித்துள்ளது.

தற்போதைய COVID-19 நிலைமை காரணமாகவே இவ்வாறு இரண்டு கட்டங்களாக குறித்த திரைப்பட விழா நடைபெறவுள்ளதாகவும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல பெப்ரவரியில் நடாத்தப்படவிருந்த நேரடி திரைப்பட விழாவை நடத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் பெர்லினேல் நிர்வாக இயக்குனர் மரியெட் ரிசன்பீக் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஆண்டின் முதல் காலாண்டில் திரையுலகிற்கு ஒரு சந்தையை வழங்குவது முக்கியம் எனவும், ஜூன் மாதத்தில் நடக்கவிருக்கும் கோடைகால நிகழ்வின் மூலம், சினிமாவுக்கான ஒரு திருவிழாவைக் கொண்டாடவும், பெர்லினேல் பார்வையாளர்களுக்கு சினிமா மற்றும் கலாச்சாரத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமூக அனுபவத்தை வழங்கவும் விரும்புகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொழில்துறைத் தளங்களான ஐரோப்பிய திரைப்பட சந்தை, பெர்லினால் இணை தயாரிப்பு சந்தை, பெர்லினால் திறமைகள் மற்றும் உலக சினிமா நிதியம் ஆகியவை 71 வது பெர்லினேலை மார்ச் மாதத்தில் ஆன்லைன் விழாவாக நடாத்தவுள்ளன. அதே நேரம், ஜூன் மாதத்தில் பொதுப் பார்வையாளர்களுக்காக - திரையரங்குகள் மற்றும் திறந்தவெளிகளில் ஏராளமான திரைப்படத் திரையிடல்களுடன் கோடைகால திரைப்பட விழா நிகழ்வு நடைபெறும்.

போட்டி மற்றும் ஏனைய பிரிவுகளுக்கான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் தற்போதைய செயல்முறை தொடர்வதுடன், சர்வதேச நடுவர் சபை பெர்லினில் படங்களை பார்த்து பரிசு வென்றவர்களை தேர்வு செய்வர். பின்னர், வெற்றியாளர்கள் மற்றும் படங்களின் தேர்வு கோடையில் பேர்லின் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் பேர்லினால் பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.