ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய சுயாதீன திரைப்பட விழாவான சன்டான்ஸ் திரைப்பட விழாவானது இம்முறை 28.01.2021 - 03.02.2021 வரை நடைபெறவுள்ளது.
வழமைபோன்று யூட்டாவின் பார்க் சிட்டி, சால்ட் லேக் சிட்டி மற்றும் சன்டான்ஸ் ரிசார்ட் ஆகிய இடங்களில் இந்த விழாவானது நடைபெறவுள்ளது.
ஒன்லைன் நிகழ்வாக நடைபெறும் விழாவில் திரையிடல்கள், கலைஞர்களுடனான கலந்துரையாடல்கள், மற்றும் கண்காட்சிகள் என்பன நடைபெறவுள்ளன.
COVID-19 தொற்றுநோய் பரவல் காரணமாகவே இந்த ஒன்லைன் முறமை அறிவிக்கப்பட்டுள்ளதாக, விழா இயக்குனரான தபிதா ஜாக்சன் கடந்த 02.12.2020 அன்று தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சாத்தியமற்ற சூழ்நிலைகளில் கூட இந்த விழாவை நடத்துவதன் மூலம் சமூக ரீதியாக தொலைதூரத்தில் இருக்கக்கூடிய சினிமா பார்வையாளர்களும் ஒன்லைன் வாயிலாக அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து திரைப்பட விழாவைக் கண்டுகழித்த அனுபவத்தைப் பெறமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.