ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும், பதிப்பாளரும், மல்லிகை சஞ்சிகையின் ஆசிரியருமான டொமினிக் ஜீவா அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் தனது 94ஆவது வயதில் 28.01.2021 அன்று காலமானார்.
ஈழத்து நவீன இலக்கியத்துறையின் தவிர்க்க முடியாத மாபெரும் ஆளுமையாக விளங்கும் இவர் 1966 முதல் மல்லிகை மாத இதழின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
அது மாத்திரமின்றி தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் 'Undrawn portrait for unwritten poetry' என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார்.
இவரது பெரும்பாலான ஆக்கங்கள் 'புரட்சிமோகன்' என்ற புனைபெயரில் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.