x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

Rotterdam திரைப்படவிழாவில் Tiger விருதை வென்ற முதல் தமிழ்த் திரைப்படம் - கூழாங்கல் (Pebbles)

07 Feb 2021

அறிமுக இயக்குனரான பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - கூழாங்கல் (Pebbles). முற்றிலும் அறிமுக நடிகர்களின் நடிப்பில் தென்னிந்தியாவின் வறுமை பற்றிப் பேசியுள்ள இந்தப் படம் Rotterdam திரைப்படவிழாவில் Tiger விருதை வென்றுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள Rotterdam என்ற நகரில் கடந்த முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் நடந்த 50ஆவது சர்வதேச திரைப்பட விழாவிலேயே இந்தத் திரைப்படம் விருதை வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு வெளியான ‘செக்ஸி துர்கா’ என்ற மலையாளப்படம் இந்த விருதை வென்றிருந்த நிலையில், இந்தியாவின் Rotterdam திரைப்பட விழாவின் Tiger விருது பெறும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். அதேநேரம் Tiger விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து Rotterdam திரைப்பட விழாவின் விருது வழங்கும் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் எளிமையான முறையில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதுடன், தம்முள் அதிகபட்ச தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.