ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
சுயாதீனத் தமிழ் இசைக்கலைஞர்களை ஒன்றிணைக்கும் முகமாகவும், அவர்களது குரல்களை உலக அரங்கறியச் செய்யும் முகமாகவும் “மஜா” என்ற செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பினை கடந்த 26.01.2021 அன்று ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் விடுத்துள்ளார்.
குறித்த செயற்றிட்டத்தினை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒஸ்கார் மற்றும் கிராமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட புலம்பெயர் ஈழத்து தமிழ் சுயாதீனப் பாடகி எம்.ஐ.ஏ (MIA)உடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளார்.
மஜா செயற்றிட்டத்தின் கீழ் உலகளாவிய இசை விழாவான YAALL ஐ முதன்மையான இசை விழாவாக சென்னையில் நடாத்தத் தீர்மானித்துள்ளனர். சென்னை முதல் டொராண்டோ வரையுள்ள பல திறமையான தமிழ் சுயாதீன கலைஞர்களை ஒன்றிணைத்து இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் இசை விழாவில் ஈழத்தமிழ் இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.