x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

'ஆறாம் நிலம்' சென்னையில் விசேட திரையிடல்

20 Feb 2021

ஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் தாயாரிப்பில், ஆனந்த ரமணனின் இயக்கத்தில் வெளியான முழுநீளத் திரைப்படமான 'ஆறாம் நிலம்' 27.02.2021 அன்று மாலை 6 மணிக்கு சென்னையிலுள்ள TAGORE FILM CENTRE NFDC தியட்டரில் விசேட காட்சிக்காகத் திரையிடப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியையும், மக்கள் வாழ்வியலையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சிலர் சென்று பார்வையிட்டுள்ளதுடன், திரைப்படம் பற்றிய தமது கருத்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.