ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
பேர்லின் திரைப்பட விழாவின் சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் பியர் விருதை ரோமானியத் திரைப்பட இயக்குனர் Radu Jude (ராடு ஜூட்) இயக்கிய 'Bad Luck Banging or Loony Porn' திரைப்படம் வென்றுள்ளது.
இந்தத் திரைப்படம் பற்றிக் கருத்து வெளியிட்டுள்ள ஜூரி சபை: கலைப்படைப்பிற்கான தரம்குன்றிய படமான Bad Luck Banging or Loony Porn திரைப்படத்திற்கே கோல்டன் பியர் விருது வழங்கப்படுகிறது. இதற்கான காரணம் என்னவெனில், அந்தத்திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளதுடன், இது தற்போதுள்ள சூழலைக் கருவாகக் கொண்டு மனித வாழ்வியலின் மதிப்புகள் மற்றும் இருப்பு பற்றி அதிக கவனத்தை கொண்டுள்ளமையாலும் இந்தப்படம் இவ்விருதிற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதுள்ள சினிமாவிற்கு சவால் விடுக்கும் தன்மையில் இந்தத் திரைப்படம் அமைந்ததுள்ளதுடன், சினிமா மற்றும் சமூக மரபுகளை கேள்வி கேட்கும் வகையிலமைந்த கமரா அசைவுகளையும் கொண்டுள்ளது. இந்தத் திரைப்படம் பார்வையாளர்களை அதிகம் கவராவிடினும், அந்தப் படத்தைப் பார்க்காது தவிர்த்துவிட முடியாதவர்களாக தன்னுடன் தக்கவைத்துக்கொள்ளும் விதமாகவும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.