x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ஒற்றைச்சிறகு - குறும்படம்

03 Oct 2021

ஜனா மோகேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படமான 'ஒற்றைச்சிறகு' எதிர்வரும் 14.03.2021 அன்று திருகோணமலை நெல்சன் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.

45 நிமிடங்களைக் கொண்டு உருவாக்கம் பெற்றுள்ள இந்த குறும்படத்திற்கான முன்னோட்ட காட்சிகள் சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கடந்த 07.03.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. சமகாலப் பெண்ணியம் சார்ந்த பல பிரச்சினைகளை மையமாகக்கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், குறித்த குறும்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் கடந்த ஆறுமாத காலமாக நடைபெற்றிருந்த நிலையில், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கலைஞர்கள் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர்.

திருகோணமலையின் வெருகல் மற்றும் மாவடிச்சேனை பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இக்குறும்படமே வெருகலில் இருந்து வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.