x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

“மஜா” (maajja) இணையத்தள செயற்றிட்டத்தின் முதல் வெளியீடு

03 Mar 2021

சுயாதீன இசைக்கலைஞர்களான தி (Dhee) மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ள கிராமிய இசை கலந்த “என்ஜோய் என்ஜாமி” என்ற றப் இசைப்பாடலானது கடந்த 07.03.2021 அன்று வெளியாகி பலரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் புலம்பெயர் ஈழத்துப் பாடகி மாதங்கி (எம்.ஐ.ஏ) ஆகியோரின் இணைவில் உருவான “மஜா” இணையத்தள செயற்றிட்டத்தின் முதல் வெளியீடு இதுவாகும். விவசாய மக்களின் வாழ்வியலையும், அழிவடைந்துவரும் வெப்பமண்டலக் காடுகளையும் உயிர்ப்பிக்கும் வகையிலமைந்த றப் இசைப்பாடகரான அறிவின் வரிகளில் அமைந்துள்ள இப்பாடலுக்கு இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன், பாடலைப் பாடியுள்ள தி (Dhee) மற்றும் அறிவு ஆகியோர் பாடல் காட்சிகளில் நடித்துள்ளனர்.

குறித்த பாடலின் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட தி (Dhee), தமது பாடல் “மஜா”வில் வெளியானதை விடவும் சுயாதீன இசைக்கலைஞா்களுக்கான வெளியை மஜா திறந்துவிட்டுள்ளமைக்காகப் பெருமைப்படுவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.