ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தின் நாட்டுக்கூத்து கலைஞரான திரு.கணபதிப்பிள்ளை ஜெயசீலன் 2021.03.24 அன்று அகால மரணம் அடைந்துள்ளார்.
சொக்கன் என்ற பெயரினால் அறியப்பட்ட இவர் தனது இளம் வயதில் இருந்தே முள்ளியவளையின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார்.
இவர் முல்லைத்தீவின் பிரபல கூத்து வடிவமான “முல்லை மோடி” நாட்டுக்கூத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான பிற்கண்ணகி பாத்திரத்தில் நடித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. "நாயகனைக் கண்டீர்களோ? இவ்வூரவரே ..." என்று கோவலனை தேடி வருவது தொடக்கம் "பற்றியெரிவாய் சிலம்பே ..." என்று முடிக்கும் வரையிலான இவரது நடிப்பு திறமையானது பார்ப்பவர்களின் மனதை உருக்கும் விதமாக அமைந்திருந்தது.
தனது திறமையான நடிப்பாலும் குரல் வளத்தினாலும் எல்லோரையும் ஈர்த்த இவரது இழப்பு ஈழத்துக் கலையுலகத்தினால் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்