ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
திறமையும் கடின உழைப்பும் கொண்ட யாரொருவரும் புகழின் உச்சத்தை அடைய முடியும் என்று வரலாற்றிற்கு மீண்டும் ஆணித்தரமாக நிரூபித்தவர் ப்ரியா ரகு, புலம்பெயர் ஈழத்தமிழ் பாப் இசைக் கலைஞரான இவர் இவ் ஆண்டிற்கான சிறந்த பாப் இசைக் கலைஞர்களில் ஒருவராக அங்கீகாரம் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி NME இதழின் வளர்ந்து வரும் 100 இசைக்கலைஞர்களில் இவரும் ஒருவர், மேலும் FIFA தளத்தின் உத்தியோகப்பூர்வ sound trackல் இவரின் Good love 2.0 பாடல் இடம்பிடித்துள்ளது.
இளம் வயதிலேயே rhythm & blues and soul இசை வகையால் ஈர்க்கப்பட்டவர் இதையே தன் வாழ்வாக்கிக் கொண்டு தமிழர் தம் பாரம்பரியத்தையும் மொழியையும் உட்புகுத்தி தெற்காசிய பெண்ணாக மேற்கத்தேய இசை உலகில் மகுடம் சூடி வலம் வருகிறார்.
தனது ஏழு வயதில் வயலின் இசைக்கக் கற்றுக் கொண்டதும், தந்தையின் சிறிய இசைக்குழுவில் தமிழ் சினிமாப்பாடல்களைப் பாடும் வாய்ப்பை பெற்றதும் இசையை தனது வாழ்வில் ஓர் அங்கமாக்கிக் கொள்ள உதவியது. தன் பாடசாலைக் கல்வியை முடித்து விமான நிறுவனம் ஒன்றில் கணக்காளர் பதவியைப் பெற்றுக்கொண்டு zurichற்கு இடம்பெயர்ந்தவர் பெற்றோருக்குத் தெரியாமல் நண்பர்களுடன் இணைந்து திறந்த வெளி இசை நிகழ்ச்சிகளில் பாடல்களை பாடி வந்தார். இதற்கான காரணம் 16வது வயதில் தன் சகோதரனின் rap குழுவில் Alica keyயினுடைய பாடலை பாடுவதை தன் நாட்குறிப்பேட்டின் மூலம் அறிந்துகொண்ட தந்தை அதை மறுத்ததை தன் வாழ்வின் மோசமான நாளாக நினைவு கூறும் இவர் அன்றுமுதல் தன் இசைப்பயணம் குறித்த எதையும் அவர்களோடு பகிர்ந்து கொள்ள கூடாது என முடிவெடுத்ததாக தன் கடந்ந காலத்தை நினைவு கூறுகிறார் ப்ரியா ரகு.
தொழிலோடு பகுதி நேரமாக இசையை தொடர்வதை விரும்பாத ப்ரியா ரகு குடும்பத்திற்கு தெரியாமல் தொழிலை கைவிட்டு 2017 ம் ஆண்டில் new york நகரிற்கு சென்று அங்கு தன் சகோதரன் Japhna Gold உடன் இணைந்து முழு நேர இசைக் கலைஞராக பாடல்களை உருவாக்க ஆரம்பித்தார். இருவரின் இணைப்பில் உருவாக்கப்பட்ட இந்தியாவில் படம் பிடிக்கப்பட்ட Good love 2.0 பாடலின் காட்சி அமைப்புகள், chicken lemon rice பாடலில் ஒலிக்கும் தபேலா இசை, kamaliயில் வரும் நாட்டுப்புற இசையும் நடனமும் என அனைத்து பாடல்களிலும் தமிழ் மொழியும் தமிழர் தம் பாரம்பரிய அடையாளங்களும் அதிகளவில் எதிரொலித்தது. இதைப்பற்றி ப்ரியா ரகு அவர்கள் தெரிவித்ததாவது, ''தமிழ் எங்கள் அடையாளமாக இருப்பத்தால் அதை எங்கள் கலை வழி வெளிப்படுத்த ஆரம்பித்தோம். இதன் போது எங்கள் சுயத்தை நாங்கள் தேடி அறிந்து கொண்டது மட்டுமின்றி கலாச்சாரத்தோடு மீள் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டோம்'' .
''நீங்கள் விரும்புவதை காணமுடியவில்லை என்றால் அதை நீங்களே உருவாக்குங்கள்'' என்ற மனதின் குரலைக் கேட்டு கனவுகளை துரத்திச்சென்று தன் திறமையை நிரூபித்தது மட்டுமின்றி உலக அளவில் தமிழரின் அடையாளங்களைப் பறைசாற்றிய ப்ரியா ரகு உண்மையில் வாழும் வரலாறாக இருப்பதுடன் இசையை மட்டுமே வாழ்வாக்கிக்கொண்டு வெற்றிப்பாதையில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் இவர் எம் சமூகத்தின் பெருமையாக(pride) திகழ்கிறார். பாரம்பரிய அடையாளங்களை நிலைநாட்டும் இவரது மற்றுமொரு படைப்பான damnshestamil இசைத் தொகுப்பும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.