ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
பல தலைமுறைகளாக உலகை வியக்க வைத்த சூப்பர் ஹீரோக்களின் கதாபாத்திர உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்ட முக்கிய கலைஞர்கள் அதன் மீது கொண்டிருக்கும் பதிப்புரிமையை நீக்கக்கோரி டிஸ்னி வேல்ட் வெள்ளிக்கிழமை 24.09.2021 வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவனான டேனியல் எம்.பெட்ரோ செல்லி, டிஸ்னி சார்பாக வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், டிஸ்னிக்கு சொந்தமான மார்வல் எண்டர்டெயின்மென்டின் ஐந்து கலைஞர்கள் சார்பாக பிரபல சொத்துரிமை வழக்கறிஞர் மார்க் டோபெரஃப் வாதிட முன்வந்துள்ளார்.
1960களின் மார்வல் கதாபாத்திர வடிவமைப்பிற்காக பெயர் பெற்ற 89 வயது காமிக்ஸ் எழுத்தாளர் லாரன்ஸ் டி.லைபர், இவரது மூத்த சகோதரரும் மார்வல் காமிக்ஸின் தலைமை எழுத்தாளரும் ஆசிரியருமான லீ, வரைகதை கலைஞர்களான ஸ்டீவ் டிட்கோ, டோன் ஹெக் மற்றும் எழுத்தாளர்களான டொன் ரிகோ, ஜென் கொலன் கலைஞர்களின் வாரிசுகளுக்கு மார்வல் கதாபாத்திரங்கள் மீது இருக்கும் உரிமத்தை நீக்குவதற்கே டிஸ்னி நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து,ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்குப் பின் குறித்த படைப்பின் ஆசிரியர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் அதன் உரிமையை மீண்டும் பெற வேண்டும். இது எழுத்தாளர் பணிக்கு அமர்த்தபட்டாரா அல்லது அவரின் சொந்த படைப்பு வெளியீட்டாளர்களுக்கு விற்கப்பட்டதா என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். 1976ம் ஆண்டு பதிப்புரிமை திருத்தச் சட்ட விதிகளின் படி நியாயப்படுத்தப்பட்டாலும் குறிப்பிட்ட படைப்புகள் மார்வல் நிறுவனத்தின் சொந்த படைப்புகள் என்பதால் இவ்வழக்கு செல்லுபடியாகாது, அதுமட்டுமின்றி சட்ட ரீதியாக எந்த வித விளைவையும் ஏற்படுத்தாது என்று உறுதிப்படுத்திய பின்னே வழக்கு தாக்கல் செய்தோம் என்று வழக்கறிஞர் பெட்ரோசெல்லி கூறினார்.
உதாரணமாக லைபருக்கு எதிராக டிஸ்னியின் புகார், மார்வலின் கதைகள் மீது உரிமைதாரர் கட்டுப்பாடுகளை செலுத்தும் உரிமத்தை அவர் பெற்றிருந்ததோடு அவரின் பங்களிப்புக்காக நிறுவனம் ஒரு பங்கு கொடுத்ததால் பதிப்புரிமை விதி இங்கு செல்லுபடியாகாது.
இதற்கு தன் கண்டனத்தைத் தெரிவித்த டோபெரோஃப் இந்த கதாபாத்திரங்கள் அனைத்து உருவாக்கப்பட்ட நேரத்தில் அவற்றின் சட்ட விதிகளின் கீழ் வாடகைக்கு தயாரிக்கப்பட்டவை அல்ல என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளார். மேலும் இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே கூலி வேலைக்கு தயாரிக்கப்பட்ட ஒரு முரண்பாடான விளக்கங்களை உள்ளடக்கியது என டோபெரோப் கூறியதுடன் இவை திருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.