ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
நியூயார்க்கை மையமாகக் கொண்டு இயங்கும் சுயாதீன திரைப்பட விநியோகஸ்தரான கினோ லோர்பர் திகில் திரைப்படங்களை இலவசமாக திரையிடுவதற்கான கினோ கல்ட் எனும் தளத்தை உருவாக்கியுள்ளனர். திரைப்படங்களை kinocult.com என்ற வலைத்தளத்தில் கிடைப்பதுடன் ரோகு, ஆப்பிள் டிவி, கூகுள் டிவி மற்றும் அமேசான் ஃபயர் டிவி ஆகியவற்றின் ஊடாக பெறக்கூடியதாக உள்ளது.
பல்வேறு காலகட்டங்களில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட பல திரைப்படங்களை கினோ கல்ட் இலவசமாக வழங்குகிறது. அண்மைய வெளியீடுகளான A Girl Walks Home Alone at Night (2014), Let the Corpses Tan (2017), and Dogtooth (2009), கிளாசிக் திரைப்படங்களான Black Sunday (1960), Black Sabbath (1963), Metropolis (1927), and The Asphyx (1972). இவைமட்டுமின்றி ஆவணப்படங்களான the Cold War nuclear bomb film The Atomic Cafe (1982) போன்ற பல திரைப்படங்கள் கினோ கல்ட்டில் பெறமுடியும்.
"எங்களது 40 ஆண்டுகால உழைப்பே இத்திரைப்படச் சேமிப்பகம். பல வகைப் பார்வையாளர்களுக்கும் மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்கான மகத்தான ஆற்றல் எங்களிடம் உள்ளது,அனைத்து திரைப்பட ஆர்வலர்களும் மிகுந்த ஆர்வம் கொண்டவர், வேறு எங்கும் காண முடியாத புதிய மற்றும் அரிய படங்களின் தேர்வுடன், HD தரத்திலான திரைப்படங்களை கினோ கல்ட்டில் பெறமுடியும். இனிமேல் நல்ல திரைப்படங்களை அணுக பெரிய திரையரங்குகள் உள்ள நகரங்களில் வசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை நாங்கள் அதை இங்கே இலவசமாக உங்களுக்கு வழங்குகிறோம்." என்று கினோ லோர்பர் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் லோர்பர் கூறினார்.
கினோ லோர்பர் சிறந்த திரைப்படங்களைக் கொண்ட சீரான சேமிப்பகத்தை உருவாக்கியுள்ளது , அதை இங்கு வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது வெறும் ஆரம்பம் மட்டுமே தொடர்ந்து தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கும் கினோ கல்ட் பார்வையாளர்கள் தாம் விரும்பும் திரைப்படங்களை கண்டு மகிழும் தளமாக இருக்கும். ”என்று கினோ கல்டின் கண்காணிப்பாளரான விபி பிரட் வூட்டு கூறினார்.
கினோ கல்டின் ஸ்ட்ரீமிங் சேவைகள் பற்றிய முதல் அறிவிப்பு வெரைட்டி இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.