x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

2021ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Oct 2021

2021ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் ஒக்டோபர் 4ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், 7 ஆம் திகதி இலக்கியத்திற்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தான்சானியா நாட்டைச் சேர்ந்த 73 வயதுடைய எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா என்பவருக்கே இவ்வாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில், ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு வெளியிட்டுள்ளது.
காலணியாதிக்கம் வளைகுடா நாட்டு அகதிகளிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இவர் எழுதிய புத்தகத்திற்காகவே அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குர்னா 10 நாவல்கள் மற்றும் பல சிறுகதைகளை வெளியிட்டுள்ள நிலையில், இவரது நான்காவது நாவலான ‘பாரடைஸ்’ 1994 இல் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், இவரின் ஆறாவது நாவலான ‘பை தி சீ’ 2001 பட்டியலில் இடம்பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.இது குறித்து, நோபல் குழுவின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன் கூறுகையில், குர்னாவின் இலக்கியப் பிரபஞ்சத்தினுள் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும் - நினைவுகள், பெயர்கள், அடையாளங்கள். இவரின் குறிக்கோள் இன்னும் நிறைவடையாமையே இதற்கான காரணம் என கூறியுள்ளார்.

1948 இல் சான்சிபாரில் பிறந்து வளர்ந்த குர்னா, 1964 இல் சான்சிபாரில் ஏற்பட்ட புரட்சியால் 18 வயதில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அகதியாக இங்கிலாந்திற்கு சென்ற குர்னா தனது, 21 வயதில் எழுதத் தொடங்கினார். அவரது முதல் நாவலான ‘மெமரி ஆஃப் டிப்பார்ச்சர்’ 1987 இல் வெளியிடப்பட்டது. அவர் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை அறிவார்ந்த உணர்ச்சியால் இயக்கப்படும் ஒரு முடிவில்லாத தேடல் அவரின் அனைத்து புத்தகங்களிலும் உள்ளது.
குர்னா, ஓய்வுபெறும் வரை கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் பிந்தைய காலனித்துவ இலக்கியங்களின் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

118 முறை வழங்கப்பட்டுள்ள இலக்கியத்திற்கான நோபல் பரிசில், 1993 இல் டோனி மோரிசனுக்குப் பிறகு வெற்றி பெற்ற முதல் கருப்பு நிற எழுத்தாளர் குர்னா ஆவார்.