x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

வசீகரிக்கும் குரலால் மக்கள் மனங்களை ஆட்கொண்ட ஓர் ஆளுமையின் குரல் இன்று ஓய்வுபெற்றது.

10 Jun 2021

யாழ்ப்பாணத்தின் பிரபல பாடகியும், நடிகையுமான ஜெயந்தி அவர்கள் 06.10.2021 அன்று லண்டனில் காலமானார்.

ஈழத்தில் மிக அரிதாக இசைக்கப்படும் மெண்டலின் இசைக் கலைஞரின் மகளும், ஈழநல்லூர் அருணா இசைக்குழுவின் பாடகியான கங்கா அவர்களின் மூத்த சகோதரியுமான இவர், யாழ்ப்பாணத்தின் பல இசைக்குழுக்களில் பாடியது மட்டுமல்லாது பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.குறிப்பாக அரியாலை V.T.A.விசுவா அவர்களின் பல நாடகங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்ததுடன், சில நாடகங்களில் இவர் சொந்தக் குரலில் பாடியும் நடித்தும் வரவேற்பை பெற்றார்.

பெண்கள் மேடையேறி நடிக்கத் துணியாத ஆரம்ப காலங்களில், மேடை நாடகங்களில் நடிக்க முன்வந்தவர்களில் இவரும் ஒருவராவார். ஈழத்து கலைத்துறையின் வரலாற்று ஏடுகளில் தனக்கென தனி அடையாளத்தை பதித்த அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.