x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

சன்டான்ஸ் திரைப்பட விழா - 2022

28 Sep 2021

2022 ஆம் ஆண்டுக்கான சன்டான்ஸ் திரைப்பட விழா, ஜனவரி மாதம் 20 - 30 வரையான திகதிகளில் நேரலையாகவும், மெய்நிகர் வழியாகவும் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை சட்டலைட் வழியான திரையிடல் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அம்ஹெர்ஸ்ட் சினிமா, பெர்ச்சர் சினிமா, இண்டி மெம்பிஸ் மாமா.பிலிம், சான் டியாகோ/டிஜிட்டல் ஜிம்மின் மீடியா ஆர்ட்ஸ் சென்டர், வடமேற்கு திரைப்பட மன்றம் மற்றும் SNF பார்க்வே தியேட்டர் ஆகிய ஏழு திரையரங்குகள் இந்த ஆண்டின் சட்டலைட் திரையிடல்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சன்டான்ஸ் நிறுவன உறுப்பினர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையளர்களுக்கான டிக்கெட்டுகள் டிசம்பர் 15 ஆம் திகதி விற்பனைக்கு வருவதுடன், 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான டிக்கெட்டுகளையும், ஜனவரி 5 ஆம் திகதி நிர்வாக உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட டிக்கெட்டுகளையும் பெறக்கூடியதாகவும் இருக்கும். அதற்கு அடுத்த நாள் ஏனைய பார்வையாளர்கள் டிக்கெட்டுகளைப் பெற முடியும்.

சன்டான்ஸ் திரைப்பட விழா, புதிய கதைகள் மற்றும் புதிய பார்வையைத் தேடும் அசல் கதைசொல்லிகள் மற்றும் பார்வையாளர்களுக்கான களமாகும். அடுத்த ஆண்டிற்கான நிகழ்ச்சித் திட்டத்தில் நாடக மற்றும் ஆவணப்பட அம்சங்கள், குறும்படங்கள், தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் என பலவற்றை உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிகழ்வின் போது தினமும் திரைப்பட இயக்குனர்களின் உரையாடல்கள், குழு விவாதங்கள் மற்றும் நேரடி இசை நிகழ்வுகளும் நடைப்பெறவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1985 ஆம் ஆண்டு முதல், விழாவின் போது வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான படங்கள் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று உலக அளவில் புதிய பார்வையாளர்களை சென்றடைந்திருந்தமையும் சிறப்பம்சமாகும். மேலும் இம்முறை கொரோனா பெருந்தொற்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது