ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சிட்னி திரைப்பட விழாவை இந்த ஆண்டு நவம்பரில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ‘ஹியர் அவுட் வெஸ்ட்’ நாடகத்துடன் ஆரம்பமாகும் விழா நவம்பர் 14 ஆம் திகதி வெஸ் ஆண்டர்சனின் ‘தி பிரெஞ்சு டிஸ்பாட்சுடன்’ நிறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 12 தொடக்கம் 21 வரை மெய்நிகர் வழியான திரையிடல் நடைபெறுவதுடன் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களும், பல அவுஸ்திரேலிய ஆவணப்படங்களும் திரையிடப்படவுள்ளன. சர்வதேச விருது பெற்ற படைப்பாளிகளான ஜேன் காம்பியன், பெட்ரோ அல்மோவர், ஜாங் யிமோ, ஆண்ட்ரியா அர்னால்ட் ஆகியோரது படைப்புகளும், ஆவணப்பட இயக்குனர்களான பிரடெரிக் விஸமன் மற்றும் கிரிஸ்துவர் பெட்சோல்ட், முகமது ராஸூல்ஃப், பாலோ சோரோரெண்டினோ, மஹமத்-சலேஹ் ஹாரூன், நவோமி க்வாஸ் மற்றும் ஜாக்ஸ் வார்டுர்ட் ஆகியோரது படைப்புகளும் என திரைப்படப் பட்டியல் நிறைந்துள்ளது.
வழமையாக ஜூன் மாதத்தில் நடத்தப்படும் விழாவானது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 - 29 வரை திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டதால் குறித்த திகதியில் நடைபெறாமல் விழா ஒத்திவைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.