ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
டிஸ்னி சேனல் முதல் முறையாக தயாரித்த இந்திய-அமெரிக்கத் திரைப்படமான ‘Spin’ திரைப்படம் கடந்த வாரம் டிஸ்னி சேனலில் திரையிடப்பட்டது. இத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமாக நடித்திருந்தவரே அவந்திகா, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நடிகை மற்றும் நடனக் கலைஞரான இவர் இன்றைய OTT தளங்களின் பிரபலமானகளில் ஒருவராக வலம் வருகிறார்.
2005 ஆம் ஆண்டு San Francisco நகரில் பிறந்த அவந்திகா, தனது ஐந்து வயது முதல் கதக், குச்சுப்புடி மற்றும் பெலட் நடனங்களில் தன் ஆளுமையை வளர்த்துக்கொண்வர். 2014 ஆம் ஆண்டு தனது 10 வயதில் Dance India Dance Little என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து Brahmotsanam என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இன்றுவரை பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
டிஸ்னி தயாரிப்பில் Manjari Makilary இயக்கத்தில் கடந்த 13.08.2021 அன்று வெளியான Spin திரைப்படமானது Reha எனும் இந்தியப் பூர்வீகம் கொண்ட அமெரிக்கப்பெண்ணையும் அவளது DJ ஆக வேண்டும் என்ற கனவையும் சுற்றி நகர்கிறது. இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரமாக நடித்திருந்த அவந்திகாவின் நடிப்புத்திறன் பலரால் பாராட்டப்படுவதும் குறிப்படத்தக்கது.
இவ்வாறு ஹாலிவுட் திரையுலகம், இந்தியத் திரையுலகம் என மாறுபட்ட இரு துறையில் தன் திறமையை நிலைநாட்டிய அவந்திகா தன் அனுபவத்தை இவ்வாறு தெரிவித்தார், “ஹாலிவுடில் பாத்திரத் தேர்வு என்பது பரந்த அளவில் காணப்பட்டாலும் தேர்வு நடவடிக்கைகள் கடினமானவையாகவும் பெரும்பாலும் நிராகரிப்பிற்கு முகம்கொடுக்க வேண்டியதாகவும் இருக்கும், ஆனால் இந்தியாவில் இளம் பெண்களுக்கான கதாபாத்திரத் தேர்வு என்பது குறைவாகக் காணப்பட்டாலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்ததன் பின் வாய்ப்புகளைப் பெறுவது இலகுவாகும். இந்தியத் திரையுலகில் மட்டுமே காணப்படும் அழகிய ஆடைகளுடன் கூடிய பாடலையும் நடனத்தையும் நான் விரும்புகிறேன், மேலும் இரு திரைப்பட உலகிலும் பணிபுரிவதை எண்ணி நான் மிகவும் மகிழ்கிறேன்.”
மேலும் இவர் Rebel Wilson என்ற நகைச்சுவை நடிகரோடு இணைந்து நடித்திருந்த மற்றோரு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகிக்கொண்டிருப்பதும், Newyork Times பத்திரிகையில் அதிகளவில் விற்பனையான நாவல் ஒன்றை வாங்கி திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.