ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
அமெரிக்காவின் பிரைம்டைம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சிறந்த கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படும் 73 வது ப்ரைம்டைம் எமி விருது வழங்கல் விழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் வழியாக நடந்து முடிந்தது. இவ்விருது விழாவில் 12 முன்னணிப் பிரிவில் எந்தவொரு வேற்று இனத்தவர்களுக்கும் விருது வழங்கப்படாமை தற்போது பெரும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிகழ்வை Cedric the Entertainer தொகுத்து வழங்கியிருந்ததுடன் Queen Elizabath II பற்றிய வரலாற்றுத் தொடரான The Crown அதிகப்படியான விருதைப் பெற்றது.
தொடர் நாடகங்களுக்கான பிரிவில் சிறந்த நடிகர்களுக்கான விருதிற்கு திறமையான வேற்று இனத்தவர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், விருதை வெள்ளையர்களான (அமெரிக்கர்களான) Gillian Anderson, Tobias Menzies, Josh o’ connor மற்றும் Olivia Colman ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நகைச்சுவைத் தொடர்களுக்கான பிரிவிலும் தலைக்காட்டியிருந்த நிறப்பாகுபாடு, சிறந்த நடிகருக்கான விருதை Jason Sudeikis இற்கும், சிறந்த நடிகைக்கான விருதை Jean smart இற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருதை Hannah Waddingham இற்கும் பெற்றுக்கொடுத்தது. இப்பிரிவில் Bowen Yan மற்றும் Rosie Perezwere போன்ற திறமை வாய்ந்த வேற்று இன கலைஞர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வரையறுக்கப்பட்ட தொடர்களுக்கான பிரிவில் Evan Peters சிறந்த நடிகருக்கான விருதையும் Julianne Nicholson சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் வெற்றிக்கோப்பையை பெற்றுச் சென்ற ஒரு சில வேற்று இனத்தவர்களில் 60 வயதான Rupaul ஒருவர். இவர் Outstanding competition program இற்காக தனது 11வது எமி வெற்றிக்கோப்பையை இம்முறை பெற்றார்.
I May destroy you தொடரின் எழுத்தாளர் மற்றும் இயக்குனரான Michaele coel வரையறுக்கப்பட்ட தொடர்களுக்கான பிரிவில் சிறந்த திரைக்கதைக்கான எமி விருதை வென்ற வேற்று இனத்தவராவார். இருப்பினும் ஏனைய திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான பிரிவில் Hacks and the crown தொடர்களுக்காக வெள்ளை இனத்தவர்களே வெற்றியீட்டியிருந்தனர்.
இவ்வாறு நிற பாகுபாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட 73 வது எமி விருது விழாவை விமர்சித்து #Emmyssowhite எனும் ஹேஷ்டாக் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்படுவதுடன் பார்வையாளர்கள் மத்தியிலும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.