x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

பெண் இயக்குனர்களின் தடம்: வெனிஸ் திரைப்பட விழா - 2021

07 Sep 2021

பெண் திரைப்பட இயக்குனரான Chloe Zhao இயக்கத்தில் வெளியான Nomadland திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஆண்டிற்கான தங்கச் சிங்கம் (Golden Lion) விருதையும் பெற்றுக்கொண்டது. அதுமட்டுமின்றி 93 வது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்றது.

அதே போல், இவ் வருடம் கான்ஸ்(Cannes) திரைப்பட விழாவில் பெண் திரைப்பட இயக்குனரான Julia Ducournauவின் Titane திரைப்படம் திரையிடப்பட்டு தங்கப்பனை (Palme d'or) விருதையும் பெற்றுக்கொண்டது. தற்போது இப்பட்டியலில் பிரெஞ்சு-லெபனானிய பெண் இயக்குனரான Audrey Golden உம் இணைந்துகொண்டார்.

2021ம் ஆண்டிற்கான வெனிஸ்(Venice) திரைப்பட விழா, தென்கொரிய இயக்குனர் பாங் ஜீன் ஹோ(Bong Joon-ho) தலைமையில் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வை பல அற்புதமான திரைப்படங்களும் நெகிழ்ச்சியூட்டும் தருணங்களும் அலங்கரித்திருந்தது மட்டுமின்றி இத் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிங்கம்(Golden lion) விருதை ‘Happening’ திரைப்படத்திற்காக இயக்குனர் Audrey Golden பெற்றுக்கொண்டதன் மூலம் வரலாற்றில் தனக்கான தனி முத்திரையைப் பதித்திருந்தார்.

Anne ernoux நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1960 காலப்பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பை செய்துகொண்ட 23 வயது பெண்ணின் சொந்த அனுபவத்தையும், கருக்கலைப்பு சார்ந்த அவலங்களையும் பற்றிப்பேசுகிறது. இத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெருமளவிலான வரவேற்பை பெற்றது. இது பற்றி இயக்குனர் கருத்துத் தெரிவிக்கையில், “இங்கு பிரதான கதாபாத்திரமான Anneயின் இடத்திலிருந்து திரைப்படத்தை அணுகும் போது பார்வையாளர்கள் புதுவிதமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

மேலும் இவ் விருது விழாவில் பல திரை ஆளுமைகளுக்குமான அங்கீகாரங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.Paolo Sorrentino இயக்கிய Hand of god திரைப்படம் Silver lion grand jury பரிசை பெற்றுக்கொண்டதுடன் இதில் நடித்திருந்த Macrcello Mastroianni புதுமுக நடிகருக்கான விருதையும் Filippo Scotti புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றனர். நடிகர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான Roberto Benigni மற்றும் புகழ் பெற்ற அமெரிக்க நடிகையான Jamie Lee Curtis வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றிருந்ததுடன், சிறந்த இயக்குனருக்கான Silver lion விருதை பெண் இயக்குனர் Jane Campion தனது The power of dog திரைப்படத்திற்காக பெற்றார். சிறந்த நடிகருக்கான Volpi cup விருதை On the job: the missing 8 திரைப்படத்திற்காக John Arcilla, மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை Parallel Mother திரைப்படத்திற்காக Penelope Cruz பெற்றனர். மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதை The Lost Daughter திரைப்படத்திற்காக Maggie Gullenhaal பெற்றிருந்ததுடன், Michaelangelo Frammartino வின் ll Baco திரைப்படம் Special jury விருதை இவ்வருடம் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.