x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ஈழத்தில் சினிமாவிற்கான களத்தினை அமைக்கும் நோக்கில் இலாபநோக்கமற்று ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே பட்டறை ஆகும்.

20 Mar 2020

இப் பயிற்சி பட்டறையானது, மே மாதம் பதினாறாம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஒன்பதாம் திகதி வரை, பிரதி சனி மற்றும் ஞாயிறு தோறும் தாயக நேரம் மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் இணைய வாயிலாக வகுப்புகளை நாடாத்தவுள்ளது. மொத்தமாக முப்பது வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன

ஈழத்து, இந்திய மற்றும் சர்வதேச அளவிலான சிறந்த வளவாளர்களினைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனோடு இணைந்ததாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு வகைப்பிரிவின் அடிப்படையில் மாணவர்களினால் தெரிவுகள் இடம்பெற்று திரைப்படங்கள் பகுத்தாய்வு செய்யவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய மாணவர்களுக்கு சினிமா சார்ந்து சிறந்த பயிற்சியினை வழங்க வேண்டுமென்கின்ற முயற்சியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பட்டறை, பல காத்திரமான படைப்புகளை வெளிக்கொணரும் என்பது உறுதி.