ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
கனேடிய மற்றும் ஈழத்து தமிழ் கலைஞர்களின் உருவாக்கத்தில் முதன் முதலாக கனடாவிலும், யாழ்ப்பாணத்திலும் எடுக்கப்பட்ட திரைப்படமே “ஒருத்தி” ஆகும். கனடாவில் வசித்து வரும் ஈழத்தினைச் சேர்ந்த இயக்குனரான P.S சுதாகரன் அவர்களால் இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. பெப்ரவரி 16ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றுள்ளது. அது மாத்திரமல்லாமல் தற்போது இணையத்திலும் பார்க்கக் கூடிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
தன்னுடைய கடந்த கால கலைத்துறை அனுபவங்களினை இணைத்து இயற்கையான, தத்ரூபம் கலந்த திரைப்படமாக இதனை உருவாக்கியுள்ளார் இயக்குனர். எமது மண்ணின் வாசனை ஒவ்வொரு காட்சியிலும் மிக லாவகமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. அதனையும் தாண்டி ஈழத்திற்கே உரித்தான பேச்சு வழக்கு எல்லா வெளிகளையும் நிரப்பியுள்ளது.
இதனுடைய இசை, பாடல்கள் கூட எமது பாணியில் அமைந்ததாக உள்ளது. எல்லா நடிகர்களும் தங்களுடைய நடிப்பினை திறமையாக வழங்கியுள்ளனர்.
இந்த திரைப்படம் சார்ந்து பெரும்பாலானோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்தாக அமைவது, “ஈழத்தின் வாழ்வியலை பல நாட்களின் பின்னர் வாழ்ந்து பார்த்தது போல் உள்ளது” என்பதுவேயாகும்.