ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
நம் நாட்டுக் கலைஞர்களின் படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் ‘ஏணை’ முழுநீளத் திரைப்படம் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. பல குறும்படங்களினை உருவாக்கி விருதுகளினை வென்றுள்ளவரும், ஈழத்தைச் சேர்ந்த தற்போது பிரான்சில் வசித்து வருகின்றவருமான இயக்குனர் அஜந்தன் என்பவரது கூட்டு முயற்சியில், நடசத்திரப் படைப்பகம் இதனை தயாரித்திருந்தது.
புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் வலியினை மிகவும் தெளிவாக இவர் படமாக்கியுள்ளார். தாயும், தாய் மண்ணும் இல்லாது வாழும் பிள்ளைகளின் வலிகளையும், ஈழத்தினை அடித்தளமாகக் கொண்டு இன்னோர் நாட்டிற்கு புலம்பெயர்ந்து செல்கின்றவர்களுக்கு சொந்த நாடு வழங்கிய வலியினை தாண்டியும் அந்த நாடும் அதிக வலியினை வழங்குவதும், கடன்சுமை, வேலையின்மை, வாழ்க்கை நகர்வு என பல உண்மை நிலைகளினை மிக துல்லியமாக வெளிக்காட்டியுள்ளனர் திரைப்படக் குழுவினர். திரைப்படத்திற்கான இசை, பாடலமைப்பு, ஒளியமைப்பு போன்றன வலிகளோடு இழையோடப்பட்டு மிக யாதார்த்தமானதாக இத்திரைப்படம் படைக்கப்பட்டுள்ளது.