x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ஈழத்து மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களுக்கான இணையவழி அஞ்சலிக் கூட்டம் இன்று பிரான்ஸ் நேரம் மதியம் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

03 May 2020

ஈழத்து நாடகத்துறை வரலாற்றில் ஆளுமை நிறைந்து விளங்கியவரான மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று தனது 85 ஆவது வயதில் காலமானார். நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி பிரான்ஸிலுள்ள மருத்துவமனை ஒன்றில் இவர் மரணமடைந்தார்.

யாழ்ப்பாணத்தின் மானிப்பாயினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படம் எனப் பல துறைகளில் புலமை பெற்றிருந்தார். தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நேரில் சென்று அன்னாரின் அஞ்சலி நிகழ்வில் பங்கு கொள்ள முடியாமையினால் இணைய வழி அஞ்சலி கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மே 3 ஆம் திகதியன்று பிரான்ஸ் நேரப்படி மதியம் இரண்டு மணியளவில் இடம்பெறும். https://us02web.zoom.us/j/85861005744 என்கின்ற இணைய முகவரி ஊடாக உலகத் தமிழர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள முடியும்.