x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

'வெடி மணியமும் இடியன் துவக்கும்' குறுந்திரைப்படம்

25 May 2020

ஈழத்து இயக்குனர்களில் காத்திரமான படைப்பாளியான மதிசுதா அவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள குறும்படமே "வெடிமணியமும் இடியன் துவக்கும்" ஆகும். இக் குறும்படம் மே 29 ஆம் திகதியன்று காலை 6 மணிக்கு newborn channel இணையத்தளம் மூலமாக வெளியிடப்படவுள்ளது.

பல விருதுகளினையும், இயக்குனர்களின் பாராட்டுக்களையும் பெற்ற ஈழத்து மண் வாசனையை எடுத்துச் சொல்லும் ஒரு குடும்பக்கதை சார்ந்த குறும்படமே இதுவாகும். இதில் முல்லை ஜேசுதாசன், கமலராணி, சங்கர், ஜசிதரன், கேசவராஜன், தர்சன் போன்ற கலைஞர்கள் நடித்துள்ளனர். ஈழத்திற்கே உரித்தான கலாசாரப் பின்னணியும், மொழிநடையும் ததும்ப உருவாக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தின் திரைக்கதையமைப்பு, இயக்கம், காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என எல்லா அம்சங்களும் முறையானதொரு கட்டமைப்போடு நகர்ந்து செல்கின்றது எனலாம்.

இவ்வாறான எம்மவர் படைப்புக்கள் தரமானதொரு ஈழ சினிமாப் பின்னணியை நிச்சயமாக வளர்ச்சியடைச் செய்யும் என்பதில் மாறுபாடான கருத்துக்கள் இல்லை. இதற்கு எங்களுடைய ஆதரவினை எப்போதும் வழங்கி ஈழசினிமாவினை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.