ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
இயக்குனர் ஞானதாஸ் காசிநாதரின் உருவாக்கத்தில் வெளிவந்து, பல சர்வதேச விருதுகளினை வென்ற 'உரு' (Trance) குறும்படம், 29.10.2017 மாலை விம்பம் அமைப்பினரால் லண்டனின் ஈஸ்வடராமில் உள்ள TMK House இல் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
போர்க்காலச் சூழலில் காணாமலாக்கப்பட்ட ஒரு மகனின் வருகைக்காக காத்திருக்கும் ஒரு தாயின் வலி நிறைந்த வாழ்க்கையினை, போர் நிறைவடைந்த பின்னர் குறிப்பிட்ட சமூக மக்களின் சடங்கரங்குகளை மையமாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள "உரு" எனப்படுகின்ற சாமியாடுதல் மரபினை முதன்மைப்படுத்தி ஒரு பாத்திரத்தின் உண்மை விம்பத்தினை அப்படியே குறும்படத்தில் படைத்துள்ளனர்.
காட்சி, கதையமைப்பு, இசை, மொழி எல்லாம் திறம்பட ஒருங்கிணைத்து குறும்படத்தினை மேலும் அழகாக மாற்றியுள்ளது. சில குறும்படங்கள், அனுபவம் மூலமாக புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றினை கதையமைப்பில் வெளிப்படுத்தும். அதில் உரு குறும்படமும் ஒன்று.