ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
"புது உலகொழுங்கு" எனப்படும் சொல்லிசைப்பாடல் அண்மைக்காலமாக அனைவராலும் அறியப்பட்டு வரும் ஒன்றாகும். சுஜீத் என்பவரினால் எழுதி, இசையமைக்கப்பட்டு, பாடப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ள இக் காணொளிப்பாடல் கடந்த மே 18 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப் பாடல், கொரோனாவிற்குப் பின்னரான சில அரசியல், சமூக விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
இதனுடைய முக்கிய சிறப்பம்சம் யாதெனில், இது ஸீரோ பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமையாகும். இன்றைய உலகின் பல்வேறு சிக்கல்களையும், வரலாற்று மாற்றங்களினையும் மிகவும் அழகான வரிகள் கையாண்டு அனைவருக்கும் விளங்கும் மொழிநடையின் மூலம் ரப்(Rap) இசையினூடாக வெளிப்படுத்தியுள்ளார்.