ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
43 வது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ உடற்கல்வி மைதானத்தில் ஜனவரி 09 முதல் 21 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வார நாட்களில் மதியம் 02 மணி முதல் இரவு 09 மணி வரையிலும், வார விடுமுறை நாட்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் காலை 11 மணி முதல் இரவு 09 மணி வரை நடைபெற்றது.
மொத்தம் 700 அரங்குகள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்பிலான புத்தகங்கள், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த புத்தக கண்காட்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தியது. முதல் நாள் நிகழ்வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவங்கி வைத்தார். அத்தோடு மட்டுமல்லாது அடுத்த வருட புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பாக தலா 70 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இறுதி நாள் நிகழ்வை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு, தன்னுடைய பங்களிப்பாக தலா 5 லட்சம் ரூபாய் அடுத்த வருடத்திலிருந்து இந்த புத்தக கண்காட்சிக்கு தருவதாக வாக்குறுதி அளித்தார்.
முற்போக்கு புத்தகங்களே அதிக அளவில் இந்த புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டதாக பல தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம், சித்தாந்தங்கள் கொண்ட புத்தகங்களை அதிகப்படியான இளைய தலைமுறை வாசகர்கள் வாங்கிச் சென்றதாக அந்தந்த புத்தக கடையில் இருப்பவர்கள் கூறினார்கள். தமிழீழ விடுதலைப் போருக்கு முன் நடந்த அரசியலையும், போருக்கு பின் அரசியலையும் வெளிப்படுத்தும் விதமாக வந்த கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் ஆகியவை பெரும்பாலனவர்களால் தேடப்பட்ட தலைப்புகளாக இருந்திருக்கிறது.
அந்த வகையில் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகி பலரால் வாங்கப்பட்டு வாசிப்புக்கு உள்ளாக்கிய புத்தகங்கள் விவரம் பின்னே வருமாறு..
கட்டுரை
நந்திக்கடல் பேசுகிறது (பின் போர்க்காலமும் களப்பதிவுகளும்) – தொகுப்பு ஜெரா
சொற்களில் சுழலும் உலகம் – செல்வம் அருளானந்தம்
அதிகார நலனும் அரசியல் நகர்வும் – ரூபன் சிவராஜ்
தாமரை ஞாபகங்கள் – ப.தெய்வீகன்
இவர்களுடன் நான் - கனகரவி
நாவல்
உயிர்வாசம் – தாமரைச்செல்வி
கருணை நதி – மிதயா கானவி
கொச்சிடக்கடvs கும்மிடிபூண்டி – ஈழவாணி
சிறுகதை
அமீலா – ப.தெய்வீகன்
துயிலாத ஊழ்(சமகால ஈழச் சிறுகதைகள்) – தொகுப்பாசிரியர்: அகரமுதல்வன்
உலகின் மிக நீண்ட கழிவறை – அகரமுதல்வன்
துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜா மலர் - உதயசங்கர்
கவிதை
போர்க்கால ராஜாளிகள் – சிந்துஜன் நமஷி
சிகண்டி – கவிதா லட்சுமி (கவிதை)