ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
பெர்லின் 70 ஆவது திரைப்பட விழா பெப்ரவரி 20 ஆம் திகதியன்று ஜேர்மனியில் ஆரம்பமாகியது. திரைப்பட விருதுகளில் சிறந்த விருதுகளுக்கான பட்டியலில் முக்கியமான இடத்தினைப் பிடித்திருப்பது "கோல்டன் பியர் "விருதாகும் .
இவ் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான இவ் விருதினை முகமது ரசூலோப் இயக்கத்தில் வெளியாகிய "தேர் இஸ் நோ ஈவில்"(There is no Evil) என்ற திரைப்படம் பெற்றிருந்தது.
ஈரானில் வழங்கப்படும் மரணதண்டனை மற்றும் அவ் மரணதண்டனை பெற்றவர்கள், அதனால் பாதிக்கப்படும் அவர்களது குடும்பங்களின் பிரச்சினைகள் சார்ந்த விடயங்களினை அவர் திரைப்படமாக்கியிருந்தார்.
இதேவேளை நாட்டின் செயலாளரை தாக்கியதற்காக கடந்த வருடம் முகமது ரசூலோப்பிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததோடு வாழ்நாளுக்கும் திரைப்படம் தயாரிப்பதற்கும் தடை வழங்கப்பட்டிருந்தது. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்ததனால் இதன் தயாரிப்பாளர் இவ் விருதினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து வெள்ளிக்கரடி (silver Bear) விருதினை "Never rarely sometimes always" எனும் திரைப்படத்திற்காக "எலிசா ஹிட்மேன்" என்பவரும், சிறந்த இயக்குனருக்கான விருதினை "The woman who Ran" எனும் திரைப்படத்திற்காக "ஹாங் சாங்-சூ" என்பவரும், சிறந்த நடிகருக்கான விருதினை "Hidden Away" திரைப்படத்திற்காக "எலியோ ஜெர்மானோ" என்பவரும் பெற்றுக் கொண்டனர். மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருது "Irradies" படத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.