ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிரான்ஸ் நாட்டின் கேன் நகரில் மிகக் கோலகலமான முறையில் இடம்பெற்றுவருவது இக் கேன்ஸ் திரைப்பட விழாவாகும். இவ் விழாவில், சர்வதேச பொழுதுபோக்கு திரைப்படங்கள், குறும்படம், ஆவணப்படம் என்பன போட்டியிடுவதோடு உலகளாவிய திரையுலகமே இதில் பங்குகொள்கின்றது.
அந்தவகையில் இவ் வருடத்திற்கான விழா மே மாதம் 12 தொடக்கம் 23 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் உலகளாவிய ரீதியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று காரணமாக இத் திரைப்பட விழாவினையும் நடாத்த முடியாமல் போயுள்ளதோடு அதன் அறிவிப்பினை ஜூன் அல்லது ஜூலை மாத ஆரம்பம் வரை விழாக் குழுவினர் தள்ளிவைத்துள்ளனர்.
மேலும் இவ் விழாவினை டிஜிட்டல் விழாவாக நடாத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஆராய்வதாக விழாவின் இயக்குனர் ஜெனரல் தியரி ப்ரேமாக்ஸ் கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் கேன்ஸ் திரைப்பட விழாவினை நிர்வாகம் செய்வது கடினமானது, அத்தோடு சர்வதேச சுகாதார நிலைமை குறித்து பல நிச்சயமற்ற நிலைகள் காணப்படுகின்றது. எனவே திரைப்படக் குழுவுடன் இது குறித்து கலந்தாலோசித்து இதற்கானதொரு முடிவினை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார்.