x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

‘How to Blow Up a Pipeline’ திரைப்படம் படிம எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கும் என FBI எச்சரிக்கை

21 Apr 2023

‘How to Blow Up a Pipeline’ திரைப்படம் டேனியல் கோல்ட்ஹேபர் (Daniel Goldhaber) இயக்கத்தில் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். இது 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரொறொண்டோ திரைப்பட விழாவில் முதன் முதலாக திரையிடப்பட்டதுடன், 2023 ஏப்ரல் 7ஆம் திகதி அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படமானது படிம எரிபொருள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை ஊக்குவிக்கும் என அமெரிக்க உளவுப் பிரிவான FBI எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க ஆவணங்களின்படி, அமெரிக்காவிலுள்ள இருபத்தி மூன்று வெவ்வேறு மாநில மற்றும் கூட்டாட்சி நிறுவனங்கள் இத் திரைப்படத்தைப் பற்றி குறைந்தது 35 எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளதாக அமெரிக்க மாதாந்த சஞ்சிகையான ரோலிங் ஸ்டோன் (Rolling Stone) கூறியுள்ளது.

எட்டுப் பேர் கொண்ட இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவினர், முக்கிய காலநிலை பிரச்சனைக்கான தற்காப்பு நடவடிக்கையாக, எண்ணெய் குழாயை சீர்குலைக்க ஒரு துணிச்சலான திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக இத்திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் இயக்குர் ரோலிங் ஸ்டோனிடம் இந்த படம் பார்வையாளர்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்திருப்பதானது, காலநிலை நெருக்கடி மற்றும் அதை நிவர்த்தி செய்வதற்கான நமது அவசரத் தேவையை வலுப்படுத்துவதாக கூறியுள்ளார்.

சமீப மாதங்களில் அமெரிக்காவில் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நடந்துள்ளமையால், FBI இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன்,
"எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை வெடிபொருட்கள் அல்லது பிற அழிவு சாதனங்கள் மூலம் குறிவைத்து தாக்குபவர்களை இந்த திரைப்படம் ஊக்குவிக்கும் திறனைக் கொண்டுள்ளது" எனவும் குறிப்பிட்டுள்ளது.